அகதியாக படகில் தப்பி செல்லும் போது கடலில் மூழ்கி உயிரிழந்து, துருக்கி நாட்டுக் கடற்கரையில் பிணமாக ஒதுங்கிய சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அய்லானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மொராகோவின் கடற்கரையில் ஒன்று கூடிய சமூக ஆர்வலர்கள் சிறுவனின் உடல் கிடந்தது போல அனைவரும் மணலில் சவம் போல் படுத்து அஞ்சலி செலுத்தியது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாய் இருந்தது.
இங்கு கூடிய சுமார் 30 சமூக ஆர்வலர்கள் இறந்த அய்லன் அணிந்திருந்ததைப் போலவே சிகப்பு மற்றும் நீல நிற ஆடைகளுடன், சிறுவன் இறந்து கிடந்த அதே நிலையில் அனைவரும் கடற்கரை மணலில், சுமார் 20 நிமிடங்கள் படுத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
0 Comments