Subscribe Us

header ads

கணவரால் தாக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்யும் இளைஞர் பட்டாளம்...



கணவரால் தாக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்யும், உண்மையான ஆண்மையின் தரத்தை உயர்த்தும் இளைஞர்கள் குழு அமெரிக்கர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. 

திருமண உறவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பெண்களுக்கு இலவச சேவையளிக்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ‘மீட்ஹெட் மூவர்ஸ்’ நிறுவனம் கடந்த 1997-ம் ஆண்டு மாணவ விளையாட்டு வீரர்களின் குழுவால் தொடங்கப்பட்டது. 

பொதுவாக திருமண பந்தத்தின்போது, பெண்கள் தமது ஊரை விட்டு, உறவை விட்டு கணவன் வசிக்கும் இடத்துக்கு அவரை பின்தொடர்வர். பல நேரங்களில் பெண்கள் கணவரை கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்கவும் சம்மதிப்பர். புதிய ஊரில் தனிமையில் இருக்கும் பெண் அவளது உறவில் ஏற்பட்டுள்ள பிளவைப்பற்றி பகிரக்கூட சிலசமயம் ஆளின்றிப்போகும். 

ஒருகட்டத்தில் கணவனால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பெண், இப்படியே வாழ்க்கையை கடக்க வேண்டியதுதான் என விரக்தி நிலைக்கும் தள்ளப்படலாம். கொஞ்சம் தைரியமான பெண் தனியே வாழ்வின் சவால்களை சந்திக்க புறப்படலாம். இதுபோன்ற பெண்களுக்கு உதவும் விதமாக அரசுசாரா சேவை மையத்துடன் இணைந்து பணிபுரியும் இந்த ‘மீட்ஹெட் மூவர்ஸ்’ அவர்களது உடமைகளை இலவசமாக அவர்களின் தேவைக்கேற்ப பல்வேறு இடங்களுக்கு கொண்டு சேர்க்கின்றனர். 

இந்த நிறுவனப் பணியாளர்கள் அனைவருமே, ‘உண்மையான ஆண், பெண்ணை அடித்து தனது வீரத்தை நிரூபிக்க எண்ண மாட்டான்’ என நம்புவதாக தெரிவிக்கின்றனர். இந்த இளைஞர் குழுவின் செயல்பாட்டுக்கு பாராட்டுக்கள்!

Post a Comment

0 Comments