Subscribe Us

header ads

புத்தளத்தில் தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை

Wasim Akram_


Change தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் புத்தளம் முஸ்லிம் கலாசார நிலையத்தில் தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவையொன்று அண்மையில் நடைபெற்றது.

புத்தளம் பிரதேச செயலகத்தின் 5ம், 6ம், 7ம், 8ம், 9ம் கிராம சேவக பிரிவு மற்றும் முள்ளிப்புரம் கிராம சேவக பிரிவை சேர்ந்த பதிவாளர்களுக்கு நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் நூற்றுக்குமதிகமானோர் வருகை தந்திருந்தனர்.

இச்சேவையில் கிராம சேவகர்களான திரு. ரஸ்மி, திரு. முஜாஹித், திரு. பெளஸ், திருமதி தெளபிகா ஆகியோருடன் புத்தளம் போலிஸ் நிலைய போலிஸாரும் கலந்து கொண்டிருந்தனர்.


காலை 9 மணி தொடக்கம் 5 மணி வரை இந்நடமாடும் சேவை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments