அபு அலா -
2015 ஆம் ஆண்டிற்கான அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்டவிளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக் கிழமை (06) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என். மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டிக்கு அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்டவிளையாட்டுப் போட்டியில் அம்பாரை பிரதேச செயலக அணி 81 புள்ளிகளைப்பெற்று முதலாமிடத்தினையும், தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலக அணி 54 புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடத்தினையும் பெற்றது.
ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி முதலாமிடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





0 Comments