நாவின்ன பகுதில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் கஞ்சாவுடன் ஐந்து பிக்குகள் மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவில் உடையில் இருந்த 21 தொடக்கம் 26 வயதுடைய பிக்குகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமாக நடமாடிய குறித்த நபர்களை அணுகிய மஹரகம பொலிஸார் குறித்த நபர்களிடம் இருந்து இரு கஞ்கா பக்கற்றுகளை கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களை கன்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments