சமீபத்தில் மத்திய மாகான சபை உறுப்பினர் ஜனாப் அசாத் சாலி அவர்கள் நடத்திய சிங்கள மொழியிலான சிங்கள ஊடகங்களுக்கான ஊடக சந்திப்பில் சகோதரர் அமைச்சர் ஹலீம் அவர்களை மிகவும் கேவலமான முறையில் விமரிசித்திருப்பதை நீங்க அறிவீர்கள். கடந்த காலங்களில் நாட்டில் துவேசமும் ஓங்கிய காலத்தில் இனங்களுக்கான புரிந்துணர்வு இல்லாமை மிகவும் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் இவர் பொதுபல சேனாவை பகிரங்கமாக எதிர்த்ததினாலும் முன்னைய ஜனாதிபதி இவரை கைது செய்து இவர் பிரபலமாக உதவியதாலும் அதன்பின்நடந்த மாகான சபை தேர்தலில் சுமார் ஒரு லட்சத்தி ஐம்பதினாயிரம் முஸ்லிம் வாக்குகள் கொண்ட கண்டி மாவட்டத்தில் சுமார் 58000 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவானார். அதன் பின் இவரின் நடவடிக்கைகள் ஒரு சராசரி முஸ்லிம் அரசியல்வாதியின் நடவக்கைகளை ஒத்ததாக இருக்கவில்லை என்பதை யாரும் அறிவார்கள். இவர் தான் மகிந்த அரசாங்கத்திற்கு எதிரான ஒரே ஒரு எதிர்க்கட்சி என்று தன்னை முன்னிறுத்தி ஊடக அறிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக விடுத்ததினால் எங்கள் சமூகத்திற்கு பாரிய அசௌகரியங்கள் உண்டு பண்ணியதை நீங்கள் அறிவீர்கள். ஐசோசுமுவின் நுகேகொட கூட்டத்தை பற்றி இவர் அறிவித்த அறிக்கையும் அதன் பின் வெற்றிகரமாக அவர்கள் கூட்டத்தை நடத்தி முடித்ததையும் நீங்கள் அறிவீர்கள்.
நேற்றைய அவரின் ஊடக சந்திப்பிலும் அவர் முன்னைய ஜனாதிபதியை காரசாரமாக தாக்கியது மட்டுமல்லாது தற்போது அவர் சாதாரன பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்கு நியாயமாக வழங்கப்பட்டிருக்கும் வரப்பிரசாதங்களை மீளப்பெறவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தற்போது அரசாங்கமும் முக்கிய எதிர்கட்சியும் ஒரு புரிந்துணர்வு கூட்டு அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லும் நோக்கில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒரு முஸ்லிம் இப்படி அறிக்கை விடுவது உசிதம் இல்லை என்பதை யாரும் ஏற்றுக்கொள்வீர்கள்.
சகோதரர் அமைச்சர் ஹலீம் அவர்களை சிங்கள ஊடகங்கள் முன்னாள் சிங்கள மொழியில் காரசாரமாக தாக்கியதில் கண்டி பிராந்திய மக்களும் மற்றும் அக்குரணை மக்களும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதை முகநூல் பதிவுகளில் அறியக்கூடியதாக இருக்கின்றது. இந்த அரசாங்கம் அமைச்சுக்கள் பகிர்ந்தளிப்பதில் இவரின் விருப்பப்படி நடைபெறவேண்டும் என்பதை இவர் எதிர்பார்க்கின்றார் போல் தெரிகிறது. முஸ்லிம் கலாச்சார அமைச்சு அமைச்சர் ஹலீமுக்கு வழங்கப்படக்கூடாது ஒரு ‘முஸ்லிமுக்கு’ கொடுக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்தது இவர் கோரிக்கை. இவர் கூற்றுப்படி அமைச்சர் ஹலீம் அவர்கள் ஒரு முஸ்லிம் அல்ல.
அல்லாஹ்வும் அவன் தூதரும் இணைவைப்பு எனக்கூறாத விஷயத்தை இணைவைப்பு எனக்கூற எவருக்கும் உரிமையில்லை. யாராவது அவ்வாறு கூறினால் அவர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே பொருள்.
இதை நபி(ஸல்) வன்மையாக கண்டித்துள்ளார்கள்....
ஒருவன் தன் சகோதரனைப் பார்த்து காஃபிரே எனக்கூறினால் அக்கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவ்விருவரில் ஒருவர் அதற்குத் தகுதியானவர் ஆகிவிட்கிறார். அவ்வாறு இல்லாவிட்டால் இக்கூற்று அவ்வாறு கூறியவருக்கு எதிராகவே திரும்பிவிடும் என இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். (புஹாரி 6103)
ஒரு இறைநம்பிக்கையாளரை காபிர் என அவதூறு கூறுவது அவரை கொலைச் செய்வதைப் போன்றதாகும் என இறைதூதர் (ஸல்) கூறினார்கள் – (புஹாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யாராவது ஒரு மனிதர் தன் சகோதரரைப் பார்த்து காபிர் என்றோ அல்லாஹ்வின் விரோதியோ என அழைத்தால், அது அவ்விருவரில் ஒருவருக்கு திரும்பும். அழைக்கப்பட்டவன் அதற்கு தகுதியாக இருந்தால் அது அவனை சாறும்,இல்லையென்றால் அழைத்தவனுக்கே அது திரும்பும்.’ (புஹாரி, முஸ்லிம்)
இவ்வாறு தெளிவான நபி மொழி இருந்தும் கூட இப்படி ஒரு முஸ்லிம் தன சகோதர் முஸ்லிம் ஒருவரை காபிர் என கூறுவது வேதனை அளிப்பதாக உள்ளது.
இது மட்டுமல்லாது அமைச்சர் ஹலீம் அவர்களை ஒரு ஒரு மோசமான பழக்க வழக்கமுள்ளவர் என்று ஒரு சிங்கள வார்த்தையில் மீண்டும் மீண்டும் அழைத்தார்.
தன் சகோதர முஸ்லிமுடைய மானமரியாதையை யார் காப்பாற்றுகின்றாரோ மறுமையில் அவருடைய முகத்தை அல்லாஹ் நரகிலிருந்து காப்பாற்றுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி)நூல்: அஹ்மத், திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போதுஇ தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்:
'இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்;த நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியம் உயிர்உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து-செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும.;'
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழி)
ஆதாரம் : புகாரி 1652
“”எவருடைய கரத்தாலும், நாவினாலும் பிற முஸ்லிம்கள் அமைதி பெறுகிறார்களோ அவரே முஸ்லிம்” என்றார்கள் நபி (ஸல்). இந்த நபி மொழியின் அடிப்படையில் நமது கரத்தால் பிற முஸ்லிம்களுக்கு தீங்கு தராமல் கவனத்துடன் நடக்க வேண்டும். நம்முடைய நாவினால் பிற முஸ்லிம்களின் மனது புண்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இப்படி நடந்து கொண்டால் தான் ஒருவன்முஸ்லிமாகவே இருக்க முடியும். இந்த அடிப்படையில் நாம் முஸ்லிமாக இருக்கிறோமா? இல்லையா? என்பதை ஒவ்வொருவரும் தங்களை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனைக்குத் தங்களை உட்படுத்த முஸ்லிம்கள் மறந்து விட்டார்கள். மாறாக அவரவருக்கு ஏற்ற அளவுகோலை வைத்து ஒருவன் முஸ்லிமா? இல்லையா? என அளந்து பார்த்து, மற்றவர்கள் யாரும் முஸ்லிமல்ல என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். இது ஒரு மன நோயாகும். இந்த மன நோயிலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் விடுபட்டு, பிரிவினையற்ற ஒரே முஸ்லிம் சமுதாயம் அமைக்க ஒன்றுபட ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.
புறம்பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என நபி(ஸல்) அவர்கள் கேட்டதும் ‘அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்’ என நபித்தோழர்கள் கூறினர். உடனே நபி(ஸல்)அவர்கள் (புறம் பேசுதல் என்பது) ‘உன் சகோதரனைப் பற்றி அவன் விரும்பாததை நீ கூறுவதாகும்’ என்று கூறினார்கள். அப்போது நான் கூறும் விஷயம் என் சகோதரனிடததில் இருந்தாலுமா? என்றுகேட்கப்பட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ கூறும் விஷயம் உன் சகோதரனிடத்தில் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசி விட்டாய்! நீ கூறும் விஷயம் உன் சகோதரனிடத்தில் இல்லையென்றால் நீ அவனைப் பற்றி அவதூறு கூறிவிட்டாய் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்:முஸ்லிம்.
இவர் முஸ்லிம் கலாசார அமைச்சைப்பற்றி ஏன் இவ்வளவு கரிசனை காட்டுகிறார் என்பதில் ஒரு பின்னணி இருக்கின்றது. நான் அறிந்த வரை கடந்த காலங்களில் முஸ்லிம் கலாசார அமைச்சுக்கு கீழ் உள்ள ஹஜ் சம்பந்தமான விடயங்களை தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளும் நோக்கில் செயல் பட்டது யாவரும் அறிவர். ஜனாதிபதி செயலகத்தினூடாக ஒரு கடிதம் மூலம் இவர் ஹஜ் தலைமக்குழுவில் தன்னை நியமிக்கும்படி கேட்டதும் இது சம்பந்தமாக இவர் அறிக்கை விட்டதும் யாவரும் அறிந்ததே. இது கை கூடவில்லை என்று ஆனதிற்கு பிறகு இவர் மறை முகமாக இந்த அமைச்சுக்கு எதிராக செயல்பட்டார் என்றும் ஹஜ் கோட்டா சம்பந்தமாக சில முகவர்களுக்கு இவர் அழுத்தம் கொடுத்தது குழப்ப்பியதும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது. அதே நேரம் மேல் மாகாண சபை உறுப்பினர் சகோதரர் பைரோஸ் ஹாஜியார் அவர்கள் 2010ல் தான் ஹஜ் கடமை புரிந்த போது அனுபவித்த அசௌகரியங்களை ஊடகங்களுக்கு தெரிவித்து அறிக்கை விட்டதில் அந்த காலகட்டத்தில் இதற்கு பொறுப்பாக அசாத் சாலியும் பாராளுமன்ற உறுப்பினர் பைசரும் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். மலசல கூடங்களில் தூங்கும் அவலமும் தாங்களிடம் அறவிட்ட கோடிக்கணக்காண ரியால்கள் கைமாரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதை வைத்து பார்க்கும் பொழுது இவரின் கரிசனையின் பின்னணி வெளிப்படையாக தெரிகிறது.
இவர் முன்னர் பல கட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட்டிருந்தும், முன்னர் ஒரு காலத்தில் மகிந்த ராஜபக்ஷவின் மிகவும் நெருங்கியவராக இருந்தும் ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியின் அனுபவத்தை முன்னெடுத்து செல்வார் என எதிர்பார்பதில் முஸ்லிம் மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.
இம்முறை நாட்டில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற முஸ்லிம் அபேட்சகர்களில் அதிக கூடிய விருப்பு வாக்குகள் பெற்றார் அமைச்சர் ஹலீம். தான் ஏற்றுக்கொண்ட அமைச்சை சரியான முறையில் செய்ததால் தான் இந்த அங்கீகாரம் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் விடயமாகும். அதே நேரம் இந்த ஊடக சந்திப்பில் பல மோசடிகள் நடைபெற்றதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். ஒரு சகோதர முஸ்லிமின் குறைகளை சிங்கள ஊடகங்களுக்கு சிங்கள மொழியில் கொடுப்பதை விட்டு விட்டு மோசடிகளுக்கு சரியான ஆதாரங்களுடன் பொறுப்பான இடங்களுக்கு விசாரணைக்காக சமர்பிப்பதை செய்யும்படி அசாத் சாலி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
ஆஷிக் நூர் முஹம்மது.
அக்குரணை
0 Comments