சூடான வெப்பநிலையிலேயே நாட்களைக் கழிக்கும் நமக்கு இந்த கடும் வெப்பத்திலும் குளிரூட்டுவது ஐஸ்கிரீம்கள்தான். குழந்தைகள் முதல் முதியவர் வரை, ஐஸ்கிரீம் உண்ணும்போது ஏற்படும் சிலிர்ப்பை அளவிட முடியுமா! என்ன?
உருகிக் கொண்டிருக்கும் ஐஸ்கிரீமை உயிரைக் கொடுத்து நாம் ஒவ்வொரு சொட்டையும் கீழே சிந்தவிடாமல் தடுத்து உண்போம் அல்லவா? அதற்கெல்லாம் தற்போது ஒரு தீர்வு கிடைத்துள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க மற்றும் டுண்டே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஐஸ்கிரீம்கள் உருகும் வேகத்தை சற்றே குறைக்கும் புரதத்தை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
சில உணவு வகைகளிலும், நம் உடலுக்கு தீங்கு விளைவிக்காத பாக்டீரியாக்களிலும் காணப்படும் பி.எஸ்.ஒன்-ஏ(BslA) என்கிற புரதம் உள்ளது. இது ஐஸ்கிரீமில் உள்ள காற்று, நீர் மற்றும் கொழுப்பை ஒன்றுபடுத்தி மென்மையான தன்மையை அதற்கு கொடுக்கிறது.
இதனால், சூடான வெப்பநிலையிலும், ஐஸ்கிரீமை நீண்ட நேரத்துக்கு உருகாமல் வைத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஆரம்ப நிலையில் இருக்கும் இந்த ஆராய்ச்சியின் முடிவின்படி, குறைவான வேகத்தில் உருகும் இந்த ஐஸ்கிரீம்கள், நம் கைக்கும் கிடைக்க குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது.
0 Comments