Subscribe Us

header ads

மத்தள விமான நிலைய விவகாரம் : சபையில் அமைதியின்மை, வீரவன்சவுக்கு கூச்சலிட்ட ஆளுந்தரப்பு

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தை நெல் களஞ்சியப்படுத்துவதற்காக பயன்படுத்த வருகின்றமை தொடர்பாக இன்று சபையில் வாதப்பிரதிவாதங்களும் அமைதியின்மையும் தலைதூக்கியது. 
பாராளுமன்ற நிலையக் கட்டளை இருபத்தி மூன்றின் கீழ் இரண்டில் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயகவினால் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தவுடன் அது தொடர்பில் விவாதமொன்று நடத்துவதற்கு தினமொன்றை கோரிய விமல்வீரவன்ச எம்.பி சர்வதேச விமானநிலையமொன்றை நெல் களஞ்சியசாலையாக பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தை அரசாங்கம் வீணடிப்பதாக குற்றம் சாட்டினார். 
இதனைத் தொடர்ந்து ஆளும் தரப்பினர் கூச்சலிட்டு விமல் வீரவன்வை அமருமாறு தெரிவித்தனர். 
இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. 
சபையை அமைதி நிலைக்கு கொண்டுவருவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்தள விமான நிலையம் தொடர்பில் விவாதமொன்றை மேற்கொள்ள தனி நாள் ஒன்றை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தார். 

Post a Comment

0 Comments