Subscribe Us

header ads

ஆற்றலை அதிகரிக்கும் எனர்ஜி பானங்களுக்கும், மூளைப் பிரச்சனைகளுக்கும் தொடர்பு உள்ளதா?...



இரவு நேரத்தில் தூங்காமல் படிப்பதற்காக உதவுகின்றது என இளம் பருவத்தினர் நம்பும் எனர்ஜி பானங்கள் அவர்களது மூளையில் எவ்வித விளைவை ஏற்படுத்துகிறது? என கண்டறிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  

இதில், ரெட் புல் போன்ற எனர்ஜி பானங்கள் அதீத சர்க்கரை மற்றும் கஃபைனைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது என்பது ஏற்கனவே தெரிந்தாலும், இவ்வகை பானங்கள் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு தொடர்பாக தற்போதைய ஆய்வை மேற்கொண்டனர். 

ஏற்கனவே மூளைக் காயங்கள்(TBI) இருக்கும் இளம்பருவத்தினருக்கு அவர்கள் அதிகமாகப் பருகும் இவ்வகைப் பானங்கள் திடீரென அவர்களை சில நிமிடங்களுக்கு மயக்கமடையவோ அல்லது இரவு முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலைக்கோ ஆளாக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கனடாவை சேர்ந்த இந்த குழுவினர் இதற்காக இதுபோன்ற பானங்களை பருகும் பழக்கத்துக்குள்ளான 11 முதல் 20 வயதுக்குட்பட்ட சுமார் 10 ஆயிரம் பேரை கண்காணித்ததில் இந்த விளைவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக இந்த ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த வயது பிரிவைச் சேர்ந்தவர்களில் சிலர், மூளைக் காயங்களால் பாதிக்கப்பட்ட பின்னர் இந்த எனர்ஜி பானங்களை அதிகமாக விரும்பி குடிப்பதாக தெரியவந்துள்ளது. இதிலிருக்கும் அதீத கஃபைன் அவர்களது, மூளையின் வேதிப்பொருட்களோடு கலந்து, அதன் சீரான செயல்பாட்டை தடுப்பதாக இந்த குழுவின் மைக்கெல் குசிமேனோ என்ற மருத்துவர் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த வயதினருக்கு ஏற்படும் மூளைக் காயங்கள் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர்  தெரிவித்துள்ளார். ஏனெனில், இந்த பருவத்தில் மூளை தொடர்ந்து வளர்ந்து வருவதால் இதுபோன்ற பிரச்சனைகள் அதன் வளர்ச்சியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இளம் தலைமுறையினர் படிக்கும் ஆர்வத்தில் இதுபோன்ற பானங்களை நாடுவதை சற்றே தவிர்த்து, இந்த ஆபத்தில் இருந்து விலகி இருக்கும்படி இந்த ஆய்வுக்குழு எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments