தேவையான பொருட்கள் :
வாழைப்பூ. - 1
முருங்கை இலை - ஒரு கப்
சிறிய வெங்காயம் - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
• வாழைப்பூவினை ஆய்ந்து நறுக்கி மோரும், உப்பும் கலந்த தண்ணீரில் போட்டு நன்கு பிசைந்து கழுவி வடிகட்டி விட்டு மீண்டும் மூன்று நான்கு முறை வேறு தண்ணீரில் கழுவி வடித்து வைக்கவும்.
• சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு வைக்கவும். பாதி வதங்கியதும், தண்ணீர் வடித்த வாழைப்பூவினை சேர்த்து நன்கு பிரட்டி மிதமான தீயில் வைத்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விடவும்.
• பிறகு முருங்கை இலையை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். இரண்டு நிமிடத்தில் வெந்து விடும்.
• கடைசியாக தேங்காய்ப்பூ சேர்த்து பிரட்டி உப்பு சரி பார்த்து இறக்கவும். இது எல்லாவிதமான சாதத்திற்கும் தொட்டு கொள்ள உணவாகும். மிகவும் சத்தானதும் கூட.
மேலும் சமையல் குறிப்புக்களை பெற : பாய் கடை சமையல் LIKE THIS PAGE


0 Comments