இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீனின் சகோதரியின் மகள் நேற்று இரவு (புதன்கிழமை) ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக வாபாத்தாகினார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்….
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்….
ஹஜ்ஜி பெருநாளை முன்னிட்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட பலகாரத்தை உட்கொண்ட சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளார்.
பதினைந்து வயதான பாத்திமா அல்தா என்ற சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் புத்தளம் நில்தடிய ரத்மல்யாய முஸ்லிம் வித்தியாலய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிறுமி அமைச்சர் ரிசாட்டின், மூத்த சகோதரியின் மகள் ஆவார்.
நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் புத்தளம் வைத்தியசாலையில் குழுமியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரவு இரண்டு பலகாரங்களை உண்ட சிறுமிக்கு இறுமல் ஏற்பட்டதாகவும் பின்னர் பலகாரம் தொண்டையில் அடைத்து மூச்சுத் திணறியதாகவும் சிறுமியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இளம் வயதில் வபாத்தான இந்தச்சகோதரியின் பிரிவுக்காக கற்பிட்டியின் குரல் அன்னாரது குடும்பத்தாருக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது .
الله اكبر
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِينَ
ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ مَـٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ
إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ
ٱهۡدِنَا ٱلصِّرَٲطَ ٱلۡمُسۡتَقِيمَ
صِرَٲطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّين
الله اكبر
اللهم صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم فى العالمين إنك حميد مجيد
لله اكبر
اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا
وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا
اللَّهُمَّ مَنْ أَحْيَيْته مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ
وَمَنْ تَوَفَّيْته مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ
الله اكبر
السلام عليكم

0 Comments