குழந்தைகள் அடம்பிடித்து கேட்கும் உணவுகளை அவர்களுக்கு வாங்கி வாங்கித் தந்தாலும், அம்மாவின் கையால் செய்துகொடுக்கும், உணவுப்பண்டத்துக்கு தனி ருசிதான். சில சமயங்களில் இது பெற்றோருக்கு புரிவதில்லை. அதனால் அவர்கள் குழந்தைகளை சந்தோஷப்படுத்த விரும்பி என்னென்னவோ செய்கின்றனர்.
குழந்தைகள் ஆண்டுக்கொரு விஷயத்தை புதிதாக விரும்புவர், அதை வேண்டுமென கேட்பர். பொதுவாக சிறுவர்கள் அதிகம் சினிமாக்களில் வரும் ‘சூப்பர் ஹீரோக்கள்’ கதாபாத்திரங்கள் மீது ஆர்வம் காட்டுவர். அப்படி ஒரு சிறுவன் தனது விருப்பமான கதாபாத்திரமான ‘டிரான்ஸ்பார்மர் கேக்’ பிறந்த நாளுக்கு வேண்டும் என ஆசையாக கேட்டான்.
குழந்தைகள் கேட்பவற்றையெல்லாம் வாங்கிக் கொடுக்க ஆசைப்படும் பெற்றோருக்கு நடுவே ஒரு அன்புள்ள அப்பா, அம்மா அவர்களது மகன் விரும்பிக் கேட்ட டிரான்ஸ்பார்மர் கேக்கை தாமே செய்து அவனது 6-வது பிறந்தநாளை சிறப்பாக்கியுள்ளனர்.
அது சாதாரண ஐசிங்-கேக் மட்டுமின்றி நிஜ டிரான்ஸ்பார்மர் போலவே எழுந்து நின்றது. அதைப் பார்த்த அவர்களின் மகன் மட்டுமின்றி, அவனது பிறந்தநாளை கொண்டாட அங்கு கூடியிருந்த அத்தனை சிறுவர், சிறுமியரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
இந்த சிறப்பான கேக் கொடுக்கும் மகிழ்ச்சியை நீங்களும் கண்டு களியுங்கள்!


0 Comments