மோர் வயிற்றில் உள்ள கிருமிகளை நீக்கும் குணம் கொண்டது. ஜீரண சக்திக்கு பெரிதும் உதவுவது. வைட்டமின் பி-2 நிறைந்தது. இதனால் ரத்த சோகையும், டென்ஷனும் தவிர்க்கப்படுகின்றது. நெஞ்செரிச்சல் உடையோர் மோர் குடிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மசாலா உணவிற்குப் பிறகு மோர் குடிக்க செரிமானம் எளிதாகும். உணவுக் குழாய், வயிறு இவற்றின் உட்புறத்தில் ஒட்டியிருக்கும் கொழுப்பு, எண்ணெய், நெய் போன்றவற்றினை கழுவி அகற்றி விடும் தன்மை கொண்டது.
உடலின் நீர் தன்மை வற்றாமல் இதிலுள்ள தாது உப்புகள் உதவுகின்றது. சிலருக்கு பால் அலர்ஜியாக இருக்கும். அவர்களுக்கு மோர் கை கொடுக்கின்றது. கால்சியம் நன்கு கிடைக்கின்றது. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், புரதம், பொட்டாசியம் என சத்துக்கள் கிடைக்கின்றன. ரத்தத்தில் சர்க்கரை அளவினை குறைக்க வல்லது. கொழுப்பு சத்தினை குறைக்கக்கூடியது. நெஞ்செரிச்சலை நீக்குவது மோருடன் சர்க்கரையோ, தேனோ கலந்து கொடுப்பது வயிற்றுப் போக்கினை நீக்குகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுகின்றது.


0 Comments