உள்நாட்டு போர் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு வரும் சிரியா போன்ற நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்த அகதிகள் விவகாரம் தற்போது மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால், ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்துள்ளன.
இதன் தொடர் நடவடிக்கையாக தங்கள் நாட்டுக்கு வரும் அகதிகளுக்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்காக கூடுதல் நிதியை, ஜெர்மனியில் ஆளும் கூட்டணி அரசு ஒதுக்கி உள்ளது. இதற்காக அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசின் உயர் அதிகாரிகள் கூடி விவாதித்தனர்.
இதன் முடிவில் அகதிகளை கையாளுவதற்கு வசதியாக மாநிலங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு 3.35 பில்லியன் டாலர் (சுமார் ரூ.21 ஆயிரம் கோடி) நிதியை விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஜெர்மனியில் கடந்த மாதம் மட்டும், அகதிகளாக குடியேற 1 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அந்த வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 8 லட்சம் பேர் அங்கு அகதிகளாக குடியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.



0 Comments