Subscribe Us

header ads

சச்சினை வீழ்த்திய பாக். கிரிக்கெட் வீரர் இன்று சிட்னியில் கார் ஓட்டும் அவலம்... (விபரம் இணைப்பு)



சச்சினின் விக்கெட்டை வீழ்த்தியதான் மூலம் புகழ் பெற்ற பாகிஸ்தான் கிரிகெட் வீரர் அர்ஷத் கான், தற்போது ஆஸ்திரேலியாவில் வாடகை கார் ஒட்டுகிறார். 

அர்ஷத் கான், 1993 முதல் 2006 வரை பாகிஸ்தானுக்காக 58 ஒரு நாள் போட்டி மற்றும் 8 டெஸ்ட் போட்டியில் ஆப்-ஸ்பின்னராக விளையாடியுள்ளார்.  முக்கியமாக 2006-ல் பெஷாவரில் நடந்த ஒருநாள் போட்டியின் போது சச்சின் விக்கெட்டை வீழ்த்தியதால் செய்திதாள்களில் தலைப்பு செய்தியானார். 

ஆனால் கபில்தேவ் நடத்திய சி.சி.எல். அமைப்பில் சேர்ந்து விளையாடிய பிறகு, அர்ஷத் கான் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை. கால ஓட்டத்தில் தற்போது ஆஸ்திரேலியாவில் வாடகை கார் ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அர்ஷ்த். 

ஆந்திராவை சேர்ந்த கணேஷ் என்பர், சிட்னியில் ஒரு வாடகை காரில் சென்ற போது, எதிர்பாராத விதமாக தான் அமர்ந்திருக்கும் காரை ஓட்டுவது அர்ஷத் கான் என்பதை கண்டுபிடித்துள்ளார். இதை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததால், மீண்டும் செய்திகளில் தலைப்பு செய்தியாகியுள்ளார் அர்ஷத் கான். ஆனால் இந்த முறை முற்றிலும் வேறு ஒரு காரணத்திற்காக...


Post a Comment

0 Comments