சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகம், கொலைகளுக்கு எதிராக மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதனை ஐக்கிய சமாதான முன்னணி ஏற்பாடு செய்துள்ளது. இக்கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாக முன்றலில் நடைபெறவுள்ளது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மொஹமட் மிப்லார் தெரிவித்திருப்பதாவது,
நாட்டில் நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதோடு கொலைகளும் அதிகரித்துள்ளன.
எனவே இதற்கெதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.


0 Comments