Subscribe Us

header ads

இப்படியும் ஒரு வினோதம்: காதலியை கொலை செய்து செல்பி எடுத்த வாலிபர்


சர்வதேச அளவில் 'செல்பி' மோகம் அதிகரித்து விட்டது. குழந்தைகள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை செல்போனில் 'செல்பி' எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் காதலியை கொலை செய்து, அவளது பிணத்துடன் ஒரு வாலிபர் 'செல்பி' எடுத்துள்ள வினோதம் சீனாவில் நடந்துள்ளது.

'குன்' என்ற அடை மொழியுடன் பெயர் கொண்ட வாலிபர் 'லின்' என்ற பெண்ணை உருகி உருகி காதலித்தார். அவர்கள் இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு நாள் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது காதலி லின்னை குன் கொலை செய்தார்.

அதன் பின்னர், தனது காதலி பிணத்துடன் சேர்ந்து 'செல்பி' எடுத்தார். அந்த போட்டோவை ஆன்–லைனில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துடன் தாங்கள் காதலித்த போது எடுத்த போட்டோக்களையும் அதனுடன் சேர்த்து வெளியிட்டு இருந்தார். 

Post a Comment

0 Comments