Subscribe Us

header ads

பிரிகேடியரை கைது செய்யுமாறு உண்ணாவிரதப் போராட்டம்


ரதுபஸ்வலவில் ஏற்பட்ட நீர் வழங்குதல் தொடர்பான பிரச்சினையின்போது, வெலிவேரிய பிரதேசவாசிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு துப்பாக்கிச் சூடு நடாத்த உத்தரவை பிறப்பித்ததாக கூறப்படும் முன்னாள் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன இன்று நாடு திரும்பவுள்ளார்.
இந்நிலையில் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவை உடனடியாக கைதுசெய்யுமாறு ஶ்ரீதம்ம தேரர் உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திலுள்ள புத்தர் சிலைக்கு அருகில் இவ்வாறு தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன துருக்கிக்கான இலங்கை தூதுவராலயத்தில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

-Daily Ceylon-

Post a Comment

0 Comments