எதிரியை கத்தி மற்றும் துப்பாக்கியைக் கொண்டு கொலை செய்வது போன்ற விளையாட்டுகளால் நிரம்பி வழியும் விர்ச்சுவல் மூலம் உலகில் நல்ல விஷயமும் செய்ய முடியும் என ‘புராஜக்ட் சானிடேரியம்’ மூலம் ஒரு மாணவர்கள் குழு ஒன்று நிரூபித்துள்ளது.
பண்டைய கிரேக்கத்தில் பித்திஸிஸ் எனத் தொடங்கி இன்றுவரை ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை லட்சம் பேரை பலி வாங்கிக் கொண்டிருக்கும் உலகின் பழமையான காச நோயைப் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலானோருக்கு இல்லை.
இந்த நோயைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தி, அந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றோமா? என்று முதல் நிலை சுயபரிசோதனை செய்து கொள்ளும் வகையில் வீடியோ கேமை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர் அபெர்ட்டே பல்கல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.
காச நோய் பற்றிய தவறான நம்பிக்கைகளால், முழுமையான நம்பிக்கையுடன் மருத்துவரை அணுகவே பலரும் அஞ்சுகின்றனர். அவர்களது பயத்தைப் போக்கி, இந்நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டால் அது எவ்வாறு செயல்படும் என்பதையும் இந்த கேமின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த கேம் உங்களை ஒரு மருத்துவராக்கி காச நோய் பாதித்த நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை கொடுப்பது என்கிற விதமாக பயணிக்கும். இந்த கேம் மைக்ரோசாப்ட் மொபைல்களிலும், க்ளவுட் தொழில்நுட்பம் மூலமும் விளையாட முடியும். இந்த கேமிற்கு இப்படிப்பட்ட விளையாட்டின் மூலம் உன்னதமான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக சமீபத்தில் தங்கப்பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
0 Comments