தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டு காடுகளில் மஞ்சள் நிறம் கொண்ட ஒருவகை விஷகுளவி உள்ளது. இதன் விஷத்தை கொண்டு புற்றுநோயை குணப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விஷத்தில் இருந்து எடுக்கப்பட்ட மருந்துகளை புற்றுநோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்தனர். அதில் அந்த மருந்து புற்றுநோய் பாதித்த செல்களை மட்டும் அழித்தது.
அதே நேரத்தில் மற்ற செல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. எனவே இந்த மருந்தை பயன்படுத்தி புற்றுநோயை குணமாக்கலாம் என டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
0 Comments