அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவரும் நோக்கில், முதுகுத் தண்டின் செயலைக் வெளியிலிருந்து கட்டுப்படுத்தும் ஆடை போன்ற அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. இதனை வட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த, மார்க் போல்லக் என்பவரை அணிய வைத்து சோதனையில் ஈடுபட்டனர்.
மார்க், இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டார். பேட்டரியின் மூலம் இயங்கும், இந்த அமைப்பு, மார்க்கின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் நடக்க உதவும். அத்துடன், அவர் எவ்வளவு தூரம் நடக்கின்றார் எனவும், கணக்கிட்டுச் சொல்லும்.
முடக்குவாதத்துக்கு பின்னர் முதன்முறையாக யாரின் உதவியும் இன்றி தானே நடந்த மார்க்கை வீடியோவாக பதிவு செய்து இந்த ஆய்வுக் குழு வெளியிட்டுள்ளது. எந்த பிரச்சனைக்கும் நிச்சயம் தீர்வு உள்ளது என்கிற நம்பிக்கையுடன் இருங்கள்! நம்பிக்கையே சிறந்த மருந்தாக மாறி உங்களது பிரச்சனைகள் அனைத்தையும் குணமாக்கும்!


0 Comments