Subscribe Us

header ads

புத்தளத்தின் புதிய பிரதிநிதிக்கு மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் வாழ்த்துக்கள் !!!

மக்கள் மறுமலர்ச்சி 
ஊடக அறிக்கை 


கடந்த பாராளுமன்ற தேர்தலில் புத்தளமக்கள் எதிர்பார்த்த சிறுபான்மை  பாராளுமன்ற பிரதிநிதியைவழமைபோல் சொற்பவாக்கு வித்தியாசத்தில் பறிகொடுத்துள்ளது பரிதாபமே.

வடபுல மக்களின் புதிதாக பதியப்பட்டுள்ள சுமார் பன்னிரெண்டாயிரம் வாக்குகள் இம்முறை ஓர் பிரதிநிதியை பெற்று தரும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் காணப்பட்ட போதிலும் அவ்வாறு நிகழாதது ஏன் என்ற கேள்விகள் நம்முன்னே எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

நமது பார்வையில் வாக்களித்த  வாக்குவீதத்தை  பார்க்கும்போது கடந்த ஜனாதிபதிதேர்தலில் காட்டப்பட்ட ஆர்வம் இந்த தேர்தலில் நமது மக்கள் மத்தியில் காணப்படவில்லை என்பதோடு பெரும்பான்மை கட்சியில் போட்டியிடுவதன் மூலம் ஒருபோதும் ஆசனத்தை கைப்பற்ற முடியாது இருபத்தியாறு வருடபுத்தளத்தின்  தேர்தல் வரலாற்றை பாருங்கள் என சுயேச்சைகுழுவினரும் சுயேச்சைகுழுவில் போட்டியிடுவதன் மூலம் ஒரு ஆசனத்தையேனும் பெறவாய்ப்பே  இல்லை நம்நாட்டில் எங்கும் அவ்வாறு நடந்த வரலாறே இல்லை என பெரும்பான்மை கட்சியினரும் கூறி மக்களை சரியாக வழிநடத்த தவறியமையோடு பெரும்பான்மை கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம்கள் மூவரும் மூன்று கட்சியை சார்ந்தவர்கள் என்பதால் ஒருவர் வெல்வதை மற்றைய கட்சிகாரர் விரும்பாததுவும் வழமைபோல பெரும்பான்மை வேட்பாளர்கள் சிறுபான்மையினரின் வாக்குகளை கவர எத்தனித்ததும் வெளிப்படை காரணிகளாகும்.

இவ்அறிய சந்தர்ப்பத்தை நழுவவிட்ட நாம் துர்ரதிஷ்டசாலிகளே இவ்வாறான ஓர் சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்கிமா? என்பது சந்தேகமே எனினும் தோல்விக்கான காரணிகளை தேடி நாம் ஒருவருக்கொருவர் குறை கூறி பகைமை வளர்ப்பதில்  பயனேதுமில்லை எனினும் தோல்வியில் துவண்டு போயுள்ள எமக்கு தேசியப்பட்டியல் பிரதிநித்துவம் கிடைத்தமை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது உண்மையாகும்.

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் வெற்றியின் விளிம்புக்கே சென்ற மாகாணசபை அமைச்சராக நம்மண்னுக்கு அளப்பரிய சேவையாற்றிய பழம்பெரும் அரசியல் வாதியான நவவி ஹாஜியார் அவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனக்கு கிடைத்த ஒரேஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கியிருப்பது காலத்தின் தேவையாகும் .

வந்தாரை வாழவைத்த புத்தள பூமி வளம்பெரும்  வகையில் பாராளுமன்ற உறுப்புரிமையை பயன்படித்தி நவவி அவர்கள் சேவையாற்றவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் அதற்கு அவர் பொருத்தமானவரே.

அம்பாறையிலே தனித்து போட்டியிட்டு தனக்கு இதுவரை தோள்கொடுத்த  கட்சி  செயலாளரையும் எதிர்த்துக்கொண்டு தனது வெற்றிக்கு பெரும் துணையாக இருந்த வன்னியையும் விட்டுவிட்டு வென்றுவிட்டார் என்று சொல்லப்பட்டு பின்னர் வெல்லப்படாத  குருநாகலையும் விடுத்து சொன்ன வாக்கை மீறாமல் புத்தளத்திற்கு தேசியப்பட்டியல் நியமனத்தை வழங்கிய அமைச்சர் ரிஷாத்தின் துணிச்சலை அரசியல் பேதங்களுக்கு அப்பால் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

இந்நியமனத்தையும் பிரதேசவாதம் பேசி சிலர் நளினப்படுத்த நினைப்பது கவலைக்குரிய விடயமாகும். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் நவவி ஹாஜியார் அவர்கள் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் சேவைசெய்யவேண்டும். என கூறிக்கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மக்கள் மருமலர்ச்சி முன்னணி பெருமிதம் அடைகின்றது..........

எஸ்.எம். மணாப்தீன்
பொதுச்செயலாளர்




Post a Comment

0 Comments