Subscribe Us

header ads

ஐரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டம் புறக்கணிப்பு. எச்.எம்.ரயீஸ்.


ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடமாகாணத்தில்  முன்னெடுக்கப்படவிருக்கும் நிரந்தர வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் வடமாகாண சபை உறுப்பினர் எச். எம்.ரயீஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் யுத்தத்தினால் வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.மன்னார் மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களும் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படாமல் பெரும்பாலான வீடுகள் அரசியல் கட்சி சார்ந்தவர்களுக்கும், மன்னார் மாவட்டத்தில் செல்வாக்கு செலுத்துகின்ற அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களுக்குமே வழங்கப்பட்டிருக்கின்றன.இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடமாகாணத்தில்  முன்னெடுக்கப்படவிருக்கும் நிரந்தர வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டிருப்பது பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மத்தியில்  பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருப்பதாக மாகாணசபை உறுப்பினர் ரயீஸ் மேலும் தெரிவித்தார்.

எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டத்தையும் உள்வாங்கி உண்மையாக பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு வீடுகள் கிடைக்கச் செய்ய உடனடி நடவடிக்கைகளை மேட்கொள்ளுமாறு வடமாகான சபை உறுப்பினர் ரயீஸ் வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர்,மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாகான சபை உறுப்பினர் ஊடகப் பிரிவு.
நன்றி.வெள்ளி தினக்குரல்.28 ஆகஸ்ட்,2015.  

Post a Comment

0 Comments