சர்வதேச சதித் திட்டம் பற்றி பேசியவர்களுக்கு நல்ல பதில் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நல்லாட்சி நடவடிக்கைகளினால் ஐக்கிய நாடுகள் அமைப்பு நெகிழ்வுப் போக்கைக் காட்ட நேரிட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பலம் பொருந்திய நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது.
சர்வதேச சூழ்ச்சித் திட்டத்தைக் காண்பித்து மக்களின் அனுதாபம் பெற்றுக் கொண்டவர்களுக்கு இன்று அந்த சந்தர்ப்பம் அற்றுப் போயுள்ளது.
கடந்த காலங்களில் உண்மையில் நல்லாட்சி தொடர்பிலான பிரச்சினைகளே காணப்பட்டன என்பது தெளிவாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து மக்கள் எடுத்த புத்திசாதூரியமான தீர்மானத்தின் நலன்களை மக்கள் இன்று அனுபவிக்கின்றனர் என அஜித் மான்னப்பெரும சிங்களப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.


0 Comments