ரஷ்ய விண்வெளி வீரர் கென்னடி படல்கா (Gennady Padalka) மேலும் 2 விண் வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பத்திரமாக இன்று பூமிக்கு திரும்பினார்.
கென்னடி படால்கா 879 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து விண்வெளியில் அதிக நாள் இருந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
படல்கா 5 வெவ்வேறான பயணங்களின் மூலம் விண்வெளியில் 879 நாட்கள் தங்கிஇருந்து உள்ளார்.
44 வது சர்வதேச விண்வெளி நிலைய பயணத்தின் மூலம் படால்கா 10 ஆண்டுகளாக இருந்து வந்த சாதனையை முறியடித்து உள்ளார்.
இதற்கு முன் ரஷ்ய விண்வெளி வீரர் செர்ஜி கிரிகேலேவ் (Sergei Krikalev) என்பவர், 803 நாட்கள் 9 மணி நேரம் 41 நிமிடங்கள் விண்வெளி நிலையத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments