Subscribe Us

header ads

புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளியின் 43 வது ஆண்டு நிறைவும் அதன் வருடாந்த சிறுவர் சந்தையும்


புத்தளம் நகரில் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளியின் 43 வது ஆண்டு நிறைவும் அதன் வருடாந்த சிறுவர் சந்தையும் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை முன்பள்ளி மண்டபத்தில் அதன் பொறுப்பாசிரியை திருமதி எம்.எஸ். பௌசுல் ரூஸி  தலைமையில் நடைபெறவுள்ளது.

புத்தளம் நகரில் முன்பள்ளிகள் என்று எதுவுமே இல்லாத ஒரு கால கட்டத்தில் 02.01.1972 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த முன்பள்ளியானது சமூகத்துக்கு பல வெற்றியாளர்களை உருவாக்கி வழங்கிய பெருமையில் இன்றும் தனது சேவைதனை புத்தளத்தில் வழங்கி வருகின்றது.

வருடாந்த கலைவிழா, வருடாந்த விளையாட்டு போட்டி வரிசையில் இவ்வருடம் புதிதாக சிறுவர் சந்தையும் இடம்பெறவுள்ளது.

இங்கு கல்வி பயிலும் 35  மாணவர்களுக்கும் முன்பள்ளி வளாகத்தில் சிறுவர் சந்தைக்கென 35 சிறு சிறு கடை தொகுதிகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன. பொருட்களை விற்பனை செய்யும் முறைகள், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மழலை உக்திகள் போன்றனவும்  முன்பள்ளியின் அந்த மழலை செல்வங்களுக்கு ஆசிரியையினால் போதிக்கப்பட்டுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வில் உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், ஐ.எப்.எம். முன்பள்ளியில் பயின்று இன்று உயர் பதவிகளை வகிக்கும் முன்பள்ளியின் பழைய மாணவர்கள், புத்தளம் நகர முன் பள்ளி ஆசிரியைகள், அரச பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட மற்றும்  கலந்து கொள்ள உள்ளனர்.

-Mohamed Sanoon-



Post a Comment

0 Comments