பி. முஹாஜிரீன்
மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரபின் 15வது ஞாபகார்த்த தின நிகழ்வு கடந்த (16) பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுத் தலைவர் அல்ஹாஜ் என்.ரி. அப்துல் காதர், மத்திய குழுச் செயலாளர் ஆசிரியர் ஐ.எல்.எம். பாயிஸ், மத்திய குழுவின் பொருளாளர் ஆசிரியர் எம்.எம். ஜெமீல் உட்பட மத்திய குழுவின் உறுப்பினர்களான அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஐ.எல். கலீலுர் றகுமான், எம். ஹனீபா, எஸ். சித்தீக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மர்ஹ_ம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் தொடர்பான நினைவுரையை ஆசிரியர் பி. முஹாஜிரீன், ஏ.எம். பைசால் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நிகழவில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.







0 Comments