சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள நின்ங்டே நகரில் உள்ள மழலையர் பள்ளி கட்டிடத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தீயிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஜன்னல் வழியே அவர்களை தூக்கி எறிந்தனர்.
இந்த மழலையர் பள்ளிக் கட்டிடத்துக்கு கீழே இருந்த காகிதப் பூக்கடையில் ஏற்பட்ட தீ பரவத் தொடங்கியதால் இந்த கட்டிடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துகொண்டது. இதையடுத்து அந்த கட்டிடத்தின் குடியிருப்பில் இருந்த மக்கள் அதன் கீழே பெரிய கம்பளியைப் பிடித்துக்கொண்டனர்.
இந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் குழந்தைகளை பள்ளியில் ஜன்னல் வழியே கம்பளி மீது எறிந்தனர். இந்த வகையில் சுமார் 300 குழந்தைகளுக்கும் மேல் காப்பாற்றப்பட்டனர். இவர்களில் சுமார் 92 குழந்தைகளும், 12 பெரியவர்களும், தீயின் பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டாலும், இயல்நிலைக்கு வராததால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் வெறும் அரை மணி நேரத்தில் உயிர்சேதமின்றி, இந்த கட்டிடத்தில் பரவியிருந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களும் சமயோஜிதமாக யோசித்ததால், எதிர்கால இளைய சமுதாயத்தியரான மழலைகள் பாதுகாப்பாக தப்பி, உயிர் பிழைத்துள்ளனர்.


0 Comments