ஹாரிபாட்டர் படத்தில் வரும் ‘இன்விசிபிள் க்ளோக்’ (மறைக்கும் ஆடை) நினைவிருக்கிறதா? இதை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நல்ல செய்தியொன்றை தெரிவித்துள்ளனர்.
முக்கியமான சில நேரங்களில் யார் கண்ணிலும் படாமல் ஹாரிபாட்டர் தப்பிக்க உபயோகிக்கும் இந்த ஆடை, மேஜிக்கால் இயங்கும். அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடரான ‘கேசில்’-இல் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததாகவும் இதேபோன்ற ஆடையொன்று வரும்.
சினிமா, தொலைக்காட்சியில் எல்லாம் ஏற்கனவே, கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட இதனை, சில செல் உயிரியை மறைக்கும் வகையாக மிகச்சிறிய அளவில் தற்போது ஆராய்ச்சியாளர்கள் நிஜமாகவே உருவாக்கியுள்ளனர். நுண்ணோக்கி மூலம் உருவாக்கப்பட்ட மெல்லிய தங்க இழையால் ஆன ‘நானோ ஆன்ட்டனா’ சூரியக் கதிரை சோலார் பேனலில் சேமிக்கின்றது.
இது ஒளிக்கற்றைகளை சிதறடிப்பதன் மூலம், மனித கண்களுக்கு தென்படாமல் போகிறது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த மறைப்பான் (மறைக்கும் ஆடை) 36 சதுர மில்லிமீட்டர் அளவுள்ள பொருளை மட்டுமே மறைக்கும்! இதைக்கொண்டு நகரும் உயிருள்ளவற்றை மறைக்க பயன்படுத்தினால், அதனை எளிதாக பார்த்துவிட முடியும் என்கிறார் அமெரிக்காவின் எனர்ஜிக் குழுவைச் சேர்ந்த க்ஸியாங் ஸாங்.
ஹாரிபாட்டர் அளவுக்கு இல்லையென்றாலும், இதுவே முப்பரிமாண வடிவம் கொண்ட பொருளை மறைக்க கண்டுபிடிக்கப்பட்ட முதல் மறைப்பான் எனக் கருதப்படுகிறது


0 Comments