நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிபாவின் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும். கடந்த ஆண்டு பிரேசிலில் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. அதன்பின் 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடைபெற இருக்கிறது. அதற்கடுத்து 2022-ம் ஆண்டு கத்தாரில் உலகக்கோப்பை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிபா தலைவர்கள் போட்டியை நடத்தும் நாடுகளை தேர்ந்தெடுப்பதில் ஊழல் செய்துள்ளனர் என்று புகார் எழுந்தது. இதன்தொடர்ச்சியாக முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். முறைகேடு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கத்தாரில் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழும்பியது.
ஆனால், கத்தாரில் 2022-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் நவம்பர் மாதம் 21-ந்தேதி முதல் டிசபம்வர் 18ந்தேதி வரை 28 நாட்கள் நடைபெறும் என பிபா தலைவர் செப் பிளாட்டர் இன்று அறிவித்தார். கடந்த 1978-ம் ஆண்டுக்குப் பிறகு மிகக்குறுகிய காலத்தில் (28 நாள்) நடைபெறும் தொடர் இதுவாகும்.
உலகக்கோப்பை நடைபெற இருக்கும் காலத்தில்தான் பிரீமியர் லீக் உள்பட முக்கியமான ஐரோப்பிய லீக் தொடர்கள் நடைபெற இருக்கின்றன. இதனால் கத்தார் உலக்கோப்பை சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், செப் பிளாட்டர் அந்த கோரிக்கைகளை நிராகரித்து விட்டார்.



0 Comments