-The Puttalam Times-
உம்ரா பயண சேவையில் 13 வருட கால சேவையின் பயணாக, 2015 ஆம் வருடம் முதல் ஹஜ் பயண முகவர் அனுமதியை License No. SLTDA/ SQA/ TA/ 01685 பெற்ற புத்தளம், சித்தீக் டிரவல்ஸ் அன்ட் டுவர்ஸ் நிறுவனத்தின் முதலாவது குழு ஹஜ் பயணிகளுக்கான தடுப்பூசி வழங்குதல் மற்றும் ஹஜ் பயண விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று (23) நூமான் மண்டபத்தில் நடைபெற்றது.
ஐ.தே.க. தேசிய பட்டியல் நியமன பாராளுமன்ற பிரதிநிதி அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி, MP நியமனம் பெற்றவுடன் கலந்துகொண்ட முதலாவது பொது நிகழ்வும் இதுவாகும்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை புகழ் புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவரான ஜே.எல். சலாஹுதீன் (காசிமி), புராக் டிரவல்ஸ் உரிமையாளர் ஏ.எல்.எம். கலீல் (மதனி – அ.இ.ஜ.உ. பொருளாளர், கொழும்பு (வடக்கு – தெற்கு) காழி நீதிவான்) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அவர்களைத் தொடர்ந்து, ஏ.டப். முஜீர் (இஹ்ஸானி), அல்ஹாபிழ் ஏ.எம்.எம். ரியாஸ் (தேவ்பந்தி – மன்பஉஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி அதிபர்) ஆகியோரும் ஹஜ் தொடர்பான விளக்க உரைகளை நிகழ்த்தினார்கள். வைத்தியர் எம்.எஸ்.எம். பாயிக் தடுப்பூசிகளை வழங்கினார்.
சித்தீக் டிரவல்ஸும் புராக் டிரவல்ஸும் இணைந்து கிடைக்கப்பெற்ற கோட்டாவின் ஊடாக 55 ஹாஜிகள் 26.08.2015 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 2.05-க்கு ஸ்ரீலங்கா எயார்லைன் விமான இலக்கம் 281 மூலம் மக்கா நோக்கி பயணமாகின்றார்கள். இவர்கள் புத்தளம், கல்பிட்டி, கலாவெவ (அநுராதபுரம்), கொழும்பு, சம்மாந்துரை, திருகோனமலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களில் புத்தளத்தைச் சேர்ந்த ஹாஜிகள் 26 ஆம் திகதி காலை 7.00 மணிக்கு, புத்தளம் பெரியபள்ளியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணத்தை ஆரம்பிப்பார்கள்.
ஹாஜிகளுக்கான டிக்கட், பாஸ்போர்ட் (விசாவுடன்), டிரவலிங் பேக், பெண்களுக்கான பயண முகவர் விலாசம் தொலைபேசி இலக்கம் பதிக்கப்பட்ட ஹிஜாப், பயணிகள் அடையாள அட்டை உட்பட ஹாஜிகளுக்குத் தேவையான வழிகாட்டி கைநூல் ஆகியவையும் வழங்கப்பட்டன. நிகழ்வின் முடிவில் பகலுணவு வழங்கப்பட்டது.
திருகோனமலையைச் சேர்ந்த ஏ.எம்.எம் அவ்வாஹுன், “நான் உம்ரா சென்ற நேரம் நூமான் ஹாஜியின் சிறப்பான சேவையை அவதானித்தேன். இன்ஷாஅல்லாஹ், எனது ஹஜ் கடமையை சித்தீக் டிரவல்ஸ் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என்று நிய்யத் செய்தேன். அந்த நிய்யத்தை அல்லாஹ்தஆலா கபூலாக்கி வைத்தான். எங்கள் ஊரைச் சேர்ந்த இரண்டு தம்பதிகளையும் அழைத்து வந்துள்ளேன்” என சித்தீக் டிரவல்ஸ் உரிமையாளர் அல்ஹாபிழ் எஸ்.எம்.எம். நூமான் வழங்கும் பயண முகவர் சேவைக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
ஹஜ் பயணம் முடிவுற்றவுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் உம்ரா பயணத்துக்கான ஆயத்தங்கள் தற்போது நடைபெறுகின்றது. விசா நெருக்கடியில் இருந்து தவிர்ந்துகொள்வதற்காக உம்ரா பயணம் மேற்கொள்ள ஆயத்தமாக இருப்போர் உங்கள் பெயர், பாஸ்போர்ட் ஆவணங்களை சித்தீக் டிரவல்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்து உம்ரா பயண ஏற்பாடுகளை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். முதலாம் குழுவில் 100 பேர் அழைத்துசெல்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதால், பதிவுக்கு முந்திக்கொள்ளுங்கள். உம்ரா பயணத்தின் பிரதம வழிகாட்டியாக அல்ஹாபிழ் ஏ.எம்.எம். ரியாஸ் அவர்கள் கடமையாற்றுவார்கள்.
மேலதிக விபரங்களுக்கு:
SIDDIQUE TRAVELS AND TOURS
No. 94, Mannar Road,
Puttalam
075 220 8586, 032 22 26 7141, 032 22 26 7142 (சன்ஹீர் மௌலவி)
072 705 2572, 00966 55 80 70 918
![]() |
| Mou. JL Salahudeen (Cassimmi) |
![]() |
| Dr. MSM Faiq |
![]() |
| Asheik ALM Khaleel (Prop. Buraque Travels) |
![]() |
| AlHafil SMM Numan (Prop. Siddique Travels) |
![]() |
| AMM Awwahun - Trincomalee (with spectaculars) |











0 Comments