Subscribe Us

வட மேல் மாகாண முதலமைச்சராக ராஜபக்ஷ முன்மொழிவு

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் அவரது பதவி இடைவெளிக்கு அம்மாகாண அமைச்சர் சந்தியா குமார ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

தற்பொழுது வடமேல் மாகாண அமைச்சராக செயற்படும் அவர், 24818 விருப்பு வாக்குகளைப் பெற்ற புத்தளம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராவார்.
இதேவேளை, மாகாண சபையின் தலைவர் தர்மசிறி தசநாயக்கவை முதலமைச்சராக நியமிக்குமாறு வேண்டி மாகாண அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Post a Comment

0 Comments