Subscribe Us

‘சீ லயன்’ சிறுவர் சங்க அங்கத்தவர்களுக்கான சிறுவர் பங்களிப்பு தொடர்பான பயிற்சி (PHOTOS)

-The Puttalam Times-

WODEPT நிறுவனத்தின் அணுசரணையுடன் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பிரிவின் கீழ், கரிகட்டை சீ லயன் சிறுவர் சங்க அங்கத்தவர்களுக்கு சிறுவர் பங்களிப்பு தொடர்பான பயிற்சி நடைபெற்றது.



  • சிறுவர் என்றால் யார்சிறுவர்களுக்கான உறுப்புரைகள் பற்றிய முழுமையான விளக்கம்,
  • சிறுவர் பங்களிப்பு என்றால் என்ன?
  • சிறுவர் சங்கத்திற்கு பங்களிப்பு செய்யும் சிறுவர்கள் யார்?
  • பங்குபற்றலுக்கு உள்வாங்கப்பட வேண்டிய சிறுவர்கள், சிறுவர் பங்களிப்பிற்குத் தடையாக உள்ள மற்றும் உதவியாக உள்ள (நபர்கள் - காரணிகள்), வெளித் தாக்கங்கள் என்ன?
  • பங்களிப்பு செய்வதால் சிறுவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
ஆகியன பற்றிய பயிற்சிகள் குழு வேலைப்பாடுகளின் ஊடாக இடம் பெற்றது. சிறுவர் சங்கத்தை அடிப்படையாக வைத்து இடம் பெற்ற இப் பயிற்சியானது சிறுவர் சங்கத்தை வலுவூட்டுவதற்கு மிகவும் உதவியாக அமைந்தது.

இப் பயிற்சியினை கரிகட்டை கிராமத்தின் வொடெப்ட் தொண்டரான திரு. பலதேவ பண்டார சிங்கள மொழியில் நடத்தினார்.

வொடெப்ட் நிறுவனமானது சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கை, மதுபானம் போதைப்பொருள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கை, பால்நிலை வலுவூட்டல் ஆகிய பகுதிகளில்வேலைகளை நடைமுறைப்படுத்துகின்றது.

மேலும், சிறுவர்களை உடல், உள, கல்வி, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்காகவும் சிறுவர் உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்துவதற்காகவும் தமது உரிமைகளை சிறுவர்கள் தாமே முன்வந்து பெற்றுக் கொள்வதற்காகவும் அறிவு, பயிற்சி மற்றும் பங்குபற்றலுக்கு வாய்ப்புக்களை வழங்கி வருகின்றது.

தகவலும் படங்களும்: எம்.எப். சுபியானி
(அணி திரட்டல் அதிகாரி - வொடெப்ட்)




Post a Comment

0 Comments