கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் மோட்டார் வாகனத்தின் சுக்கானம் மற்றும் திறப்பு என்பன முழுமையாக எரிந்து காணப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதாக என்பதை பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இரகசியப் பொலிஸாரின் வேண்டுகொளுக்கிணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதா? விபத்துக்குள்ளானதனால் வாகனம் தீ பிடித்துள்ளதா? அப்படித் தீ ஏற்பட்டால் சுக்கானமும், திறப்பும் முழுமையாக எரிந்து சாம்பளாக சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றதா? என்பது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இந்த மோட்டார் கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இருந்தால், சாரதிக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்பட்டிருக்கும்? சுக்கானம் உடைந்து செல்ல வாய்ப்புள்ளதா? அவ்வாறு உடைந்து செல்லாதிருந்தால் அதனை எவ்வாறு அகற்றினார்கள்? போன்ற விடயங்கள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 Comments