Subscribe Us

header ads

வார இறுதிப் பத்திரிகைகளுக்கு தடைபோட்ட தேர்தல் ஆணையாளர் (கடிதம் இணைப்பு)

வார இறுதிப் பத்திரிகைகளை இன்றைய தினம் விற்பனை செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையாளர் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று வெளியான சிங்கள வார இறுதிப் பத்திரிகைகளில் முதல்பக்க கவர் ஸ்டோரி போன்று கடந்த மஹிந்த அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் சாதனைகள் தொடர்பான விளம்பரங்கள் இடம்பெற்றிருந்தன.

இதற்காக பழைய பத்திரிகைச் செய்திகளை வெட்டியெடுத்து, ஒட்டி உண்மையான பத்திரிகை முன்பக்கம் போன்றே தயார் செய்திருந்தார்கள்.

இந்த விளம்பர உத்தி காரணமாக மஹிந்த அரசின் ஊழல்கள் மக்கள் மத்தியில் மீண்டும் ஞாபகப்படுத்தப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான மனோநிலை மக்கள் மத்தியில் உருவாகத் தொடங்கியது.

இதனையடுத்து மஹிந்த தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்த தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வார இறுதிப் பத்திரிகைகளை இன்று விற்பனை செய்வதற்குத் தடை விதித்துள்ளார்.

பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் சிங்கள மொழி வார இறுதிப் பத்திரிகைகள் திங்கள் வரை விற்பனை செய்யப்படுவது வழக்கமாகும்.





தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய

Post a Comment

0 Comments