Subscribe Us

header ads

இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக புத்தளம் மற்றும் அனுராதபுரத்தில் 24 வாக்குச் சாவடிகள்


போர் காரணமாக இடம்பெயர்ந்து, இதுவரை வன்னியில் நிரந்தரமாக குடியேறாத சுமார் 10 ஆயிரம் வாக்காளர்களுக்காக புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் 24 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வசித்து வரும் வாக்காளர்களுக்காக புத்தளத்தில் 22 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு 8 ஆயிரத்து 783 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அதேவேளை வன்னி மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து அனுராதபுரம் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் 775 வாக்காளர்களுக்காக அனுராதபுரத்தில் 2 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக தனியான மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வன்னி மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகளுடன் இந்த வாக்குகள் சேர்க்கப்படும்.

இந்த வாக்குகளை புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பார்கள் எனவும் ஹரிஸ்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை வன்னி மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 2 லட்சத்து 53 ஆயிரத்து 58 வாக்காளர்களுக்காக வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 334 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய

Post a Comment

0 Comments