Subscribe Us

header ads

சட்டங்களை மீற அனுமதியாதீர்:தேர்தல் ஆணையாளரின் துணிவு பாராட்டுக்குரியது


தேர்தல் சட்டங்களை மீற எவருக்கும் இடமளிக்க வேண்டாமென நியாயமான சமுதாயத்தை நோக்கிய தேசிய இயக்கத்தின் தலைவரான சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித்த தேரர் நேற்று தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் முறைபபாட்டைச் சமர்ப்பித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் கருத்து வெளியிட்டார்.

ஜனாதிபதியின் உரையை மீண்டும் பகிரங்கப்படுத்த வேண்டாமென அச்சமின்றி அறிவித்து தமக்குள்ள சட்ட அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்தியமை தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இம்முறை தேர்தலில் குழப்பங்கள், கொலைகள், தீவைப்பு, ஊர்வலம் எல்லாம் குறைவாக இருந்தன, இது சிறந்த ஆரம்பமாகும். இதற்கு நூறுவீத சான்றிதழ் வழங்க முடியாது. தேர்தல் சட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்த மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது.

தேர்தல் முடியும் வரை கட்சி, நிறம் பார்க்காமல் சட்டத்தை அமுலாக்குமாறும் இறுதி முறையாகவும் கேட்கிறோம்.

அமைதியான, நியாயமான தேர்தல் நாட்டுக்கு அவசியம். அச்சமின்றி வாக்குகளை அளிக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும்.

பாராளுமன்றம் நாட்டின் அதிஉயர் நிறுவனமாகும். அதற்கு சிறந்தவர்கள் தெரிவாக வேண்டும்.

நாட்டை நிர்வகிக்கும் 225 பேர் இரண்டு கோடி மக்களுக்காக ஐந்தாண்டுகள் நியமனம் பெறுகின்றனர்.

குற்றம் இழைக்காத கெளரவமானவர்களே பாராளுமன்றத்திற்கு தேவைப்படுகின்றனர்.

புதிய பாராளுமன்றம் நியமிக்கப்பட்ட பின் 19வது யாப்பின் திருத்தத்துக்கு ஏற்ப செயற்படுதல். பொருத்தமான புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றுதல், தகவல் அறியும் உரிமையை உறுதி செய்தல் போன்றவற்றுக்காக சட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென்றும் சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித்த தேரர் தெரிவிததுள்ளார்.


தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய

Post a Comment

0 Comments