தலைநகர் டெல்லியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் போக்குவரத்து சிக்னலில் பாலியல் தொந்தரவு செய்த வாலிபரின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு போலீசாரிடம் சிக்க வைத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று டெல்லி அகர்வால் திலக் நகர் பகுதியில் இரவு போக்குவரத்து சிக்னலில் பைக்கில் நின்றிருந்த இளம்பெண்ணை மற்றொரு பைக்கில் வந்த வாலிபர் ஆபாசமாகப் பேசியும் கிண்டலடித்தும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்போது சுற்றியிருந்த பொதுமக்கள், அந்த வாலிபனை தட்டிக் கேட்காமல், சினிமா ஷூட்டிங்கைப் போல் வேடிக்கை பார்த்தனர்.
அமைதியாக அந்த வாலிபனை புகைப்படம் எடுத்த இளம்பெண் அதனை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். உடனே ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அதை பேஸ்புக்கில் ஷேர் செய்து அந்த வாலிபனுக்கு கண்டனம் தெரிவித்தனர். இது பெரிய அளவில்
சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவனைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கிய போலீசார். தற்போது அந்த வாலிபனைக் கைது செய்துள்ளனர்.
பெண்கள் தங்கள் பயத்தை விட்டு விட்டுவதே, அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு என்பதையே இந்த சம்பவம் உறுதி செய்கிறது.....
0 Comments