தங்களது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொண்ட அபூர்வ கிரிக்கெட் வீரர்களான சங்ககராவும், மைக்கேல் கிளார்க்கும் டுவிட்டரில் பரஸ்பரம் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர்.
மைக்கேல் கிளார்க் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஒரு அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. சங்கா ஒரு மிகச் சிறந்த வீரர் மட்டும் அல்ல சிறந்த மனிதரும் கூட. வாழ்த்துக்கள் சங்கா” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் வாழ்த்து தெரிவித்துள்ள சங்ககரா, “நீங்கள் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன். அதேசமயம் மற்றவர்கள் பின்பற்றத்தக்க தலைவரும்கூட” என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
0 Comments