தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய அமைச்சர்களை நியமிக்குமாறு நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.
தேசிய அரசாங்கம் அமைப்பதென்றால் நியமிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை 40 எனவும், அரசியல் அமைப்பிற்கமைய 30 அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்க முடியும். இந்த வரம்பை தாண்டி அமைச்சர்கள் நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் நாட்டை பின் நோக்கி கொண்டு செல்வதோடு, அதுவொரு குற்றம் என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை மீறினால் தான் அதற்கு மிகுந்த அதிருப்த்தியை வெளியிடுவதாகவும், வாக்குறுதிகளை மீறும் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றால் அது தரம் குறைந்த ஒரு செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குறுதிகளை மீறி செயற்பட்டால் அதற்கு அதிருப்தி வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இது குறித்த தகவலை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.


0 Comments