நாட்டின் இளைய தலைமுறையினரின் அரசியலாக ஜே.வி.பி மாற்றமடைந்துள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய இளைய தலைமுறையினர் மிக வேகமாக உலகை தரிசிக்கின்றனர்.
இதனால் நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் விரைவில் அவர்களை சென்றடைகின்றது.
நவீன தொழில்நுட்பத்துடன் இவர்கள் பிணைந்துள்ளனர்.
இதனால் கடந்த ஆட்சியாளர்களில் மோசமான அரசியல் பற்றி மிகத் துரிதமாகவும் துல்லியமாகவும் இளைய தலைமுறையினர் புரிந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் அரசியல் ரீதியாக வயது முதிர்ந்த கட்சிகளாகவே செயற்படுகின்றன.
இதனால் இளைஞர்கள் புதிதாக தேடுவதற்கு புதிதாக உலகை தரிசிப்பதற்கு இந்த இரண்டு கட்சிகளின் ஊடாகவும் முடியாத நிலைமை காணப்படுகின்றது.
இந்த இரண்டு கட்சிகளையும் அரசியல் ரீதியான முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அடிக்கடி புதிதாகும் புதிய மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளும் ஜே.வி.பி. நாட்டின் இளைய தலைமுறையினர் இணைந்து கொண்டுள்ளனர்.
புதிய தலைமுறையின் கட்சி ஜே.வி.பியாகும். இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்பு ஜே.வி.பியாகும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


0 Comments