ஹம்பாந்தோட்டை மக்கள் சாராயத்திற்கு விலை போக மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மக்கள் சோற்று பார்சல், பணம் மற்றும் சாராயத்திற்கு விலை போக மாட்டார்கள் என்பதனை நிரூபித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச விருப்பு வாக்கு வேட்டையில் ஈடுபட்டிருந்தார்.
எனினும் நாம் ஓர் குழுவாக இணைந்து மக்களின் மனதை தொட முயற்சித்தோம்.
இந்த முயற்சி வெற்றியளித்துள்ளமை நடைபெற்று முடிந்த தேர்தலின் பெறுபேறுகள் மூலம் வெளிச்சமாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக எம்மை உறவினர்களாக நண்பர்களாக பார்க்கின்றனர்.
ராஜபக்சக்கள் மீதான மக்கள் நம்பிக்கையே மாவட்ட தேர்தல் முடிவு வெளிப்படுத்தி நிற்கின்றது.
கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டையில் மேற்கொண்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களை இந்த அரசாங்கம், அரசியல் நோக்கங்களுக்காக இடைநிறுத்தாது என நம்புகின்றேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றி தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments