Subscribe Us

header ads

மஹிந்த தேசத்தின் தந்தை என்கிறது முஸ்லிம் வொய்ஸ் அமைப்பு

இன­வா­தத்தை தூண்­டு­ப­வர்­க­ளுக்கு எதிர்­வரும் தேர்தலில் வாக்­க­ளிக்க கூடாது. மஹிந்த ராஜ­பக் ஷ இந்த தேசத்தின் தந்தை இன­வா­தத்தின் தந்­தையாக சம்பிக்க ரண­வக்­க­வுள்ளார் என முஸ்லிம் வொய்ஸ் அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி என்.எம்.ஷஹீக் தெரிவித்தார்.
முஸ்­லிம்கள் தேர்தலில் எவ்­வாறு நடந்து கொள்ள வேண்டும் எனும் தொனிப்­பொ­ருளில் முஸ்லிம் வொய்ஸ் அமைப்பு நேற்று வியா­ழக்­கி­ழமை கொழும்பு பேர்ள் சிட்டி ஹோட்­டலில் ஏற்­பாடு செய்­தி­ருந்த செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்­ந்து உரை­யாற்­று­கையில்,
எதிர்­வரும் தேர்தலில் மஹிந்த ராஜ­பக் ஷ வெற்றி பெற்று பிர­த­ம­ரானால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பிரச்­சி­னைகள் மீண்டும் தலை­தூக்கும் என பிர­சாரம் செய்­யப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான பிர­சா­ரங்கள் முஸ்லிம் தலை­வர்கள் தங்­க­ளது சுய நலத்­திற்­காக மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாகும்.
கடந்த அர­சாங்­கத்தில் நிகழ்ந்த சில சம்­ப­வங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு குறிப்­பாக அளுத்­கம கல­வ­ரத்தை சுட்­டிக்­காட்­டியே பிர­சாரம் செய்­யப்­ப­டு­கின்­றது. அத்­துடன் பொது­ப­ல­சே­னா­விற்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கை­யையும் மஹிந்த ராஜ­பக் ஷ எடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் இருக்­கின்­றது.
கடந்த 30 வரு­ட­கால யுத்­தத்தை ஒழித்து மக்கள் நிம்­ம­தி­யாக வாழக்­கூ­டிய நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யவர் மஹிந்த ராஜ­பக் ஷ. அதனால் தற்­கா­லத்தில் அவரை தேசத்தின் தந்தை என அழைக்­கின்­றனர். அதே போன்று சிங்­கள, முஸ்லிம் மக்கள் மத்­தியில் இருந்த ஒற்­று­மையை இல்­லா­தொ­ழித்து இன­வாத கருத்­துக்­களை பரப்பி வரும் சம்­பிக்க ரண­வக்க இன­வா­தத்தின் தந்­தை­யென தற்­கா­லத்தில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.
சம்­பிக்க ரண­வக்க முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஐந்து புத்­த­கங்­களை எழு­தி­யுள்ளார். இந்த புத்­த­கங்கள் வெளியி­டப்­பட்­டதன் பின்­னர்தான் சிங்­கள, முஸ்லிம் மக்கள் மத்­தியில் இருந்த நல்­லி­ணக்­கத்தில் விரிசல் ஏற்­பட ஆரம்­பித்­தது. 30 வரு­டங்­களில் இந்த நாடு முஸ்லிம் நாடாகும் என்றும் முஸ்­லிம்கள் 50 வீதத்­திற்கு மேற்­ப­டும்­போது அவர்­களை கொலை செய்து விடு­மாறும் அந்தப் புத்­த­கங்­களில் எழு­தி­யுள்ளார். இவ்­வா­றான நச்­சுக்­க­ருத்­துக்­க­ளி­னால்தான் பொது­ப­ல­சேனா, சிங்­கள ராவய போன்ற இன­வாத அமைப்­புக்கள் உரு­வா­கின.
மேலும் மஹிந்த ராஜ­பக் ஷ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக எழுந்த சக்­தி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும்­போது அதை தடுத்­தவர் சம்­பிக்க ரண­வக்க. அதே­போன்று அளுத்­கம சம்­ப­வத்தில் பொது­ப­ல­சே­னாவின் செயற்­பாட்டை சரி­கண்­ட­வரும் சம்­பிக்­கதான்.

இப்­போது சம்­பிக்க ரண­வக்க ஐக்­கிய தேசிய கட்­சியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இருக்­கிறார். ஐக்­கிய தேசிய கட்­சிக்கு வாக்­க­ளிப்­பதன் மூலம் சம்­பிக்க போன்ற இன­வா­தி­கள் பாரா­ளு­மன்­றத்­திற்கு போகக் கூடிய வழி அமைந்து விடும். எனவே முஸ்­லிம்கள் எதிர்­வரும் தேர்தலில் சிந்­தித்து செயற்­பட வேண்டும்.

ரொஷான் அஸீம் இங்கு கருத்து தெரிவித்த அவ் அமைப்பின் ஊடகப் பேச்­சாளர் ரொஷான் அஸீம் கூறு­கையில்,

முஸ்­லிம்­க­ளுக்கு இன்று உண்­மை­யான, நம்­பிக்­கை­யான தலை­வர்கள் தேவை. தற்­போ­தைய முஸ்லிம் தலை­வர்கள் இந்த சமூ­கத்­திற்கு எதுவும் செய்­ய­வில்லை. அவர்கள் தங்­க­ளது சுய­ந­ல­னுக்­காக முஸ்லிம் சமூ­கத்தை விற்­பனை செய்­கின்­றனர்.
எமது சமூ­கத்தில் தொழில் இன்றி எத்­தனை இளை­ஞர்கள் இருக்­கின்­றனர் என்­பது இவர்­க­ளுக்கு தெரியாது. இதைப்­பற்றி இவர்கள் சிந்­திப்­பது கூட இல்லை. இந்த தலை­வர்கள் எமது சமூ­கத்தை விற்று அர­சியல் செய்­வதை நிறுத்திக் கொள்ள வேண்­டும். இல்­லா­விட்டால் இவர்­க­ளுக்கு எதி­ராக போரா­டுவோம்.
நூர் நிஸாம்
இங்கு கருத்து தெரிவித்த அவ் அமைப்பின் ஏற்­பாட்­டாளர் நூர் நிஸாம் கூறு­கையில்,
கடந்த காலத்தில் ஆட்­சி­யி­லி­ருந்த எந்­த­வொரு அர­சாங்­கமும் முஸ்­லிம்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை தீர்க்க முன்­வ­ர­வில்லை. பாரா­ளு­மன்­றத்தில் சுமார் 18 முஸ்லிம் உறுப்­பி­னர்கள் இருந்­தனர். இவர்கள் தங்­க­ளது சுய­ந­லத்­திற்­கா­கவும், தாம் சார்ந்த கட்­சியை வளர்ப்­ப­தற்­கா­க­வுமே செயற்­பட்டு வந்­ததை இவர்­க­ளது கடந்த கால செயற்­பா­டுகள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

அத்­துடன் திரு­கோ­ண­ம­லையில் பல வரு­டங்­க­ளாக மக்கள் போக்கு வரத்துக்கு பாலம் ஒன்று இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தபோது அங்கு பாலம் அமைப்பதற்கு ஐந்து முறை அடிக்கல் நாட்டியும் அது அமைக்கப்படவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ அந்த பாலத்தை கட்டி முடித்து மக்களின் கஷ்டத்தை போக்கினார். அத்துடன் யுத்தம் முடிந்ததன் பின்னர் வடகிழக்கு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் 159 பள்ளிவாசல்களில் அதான் ஒலிக்க கேட்கின்றது என்றார்.

Post a Comment

0 Comments