-நடராஜா குருபரன்-
என்னைப் பொறுத்தவரையில் இந்நடவடிக்கை ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான். தேர்தல் பிரசாரம் முடிவடைந்த உடனேயே மைத்திரி ஆரம்பித்த “ஒப்பரேசன் லிபரேசன்”; தேசியப்பட்டியலில் நியமனம் வரை தொடர்கிறது.
தேர்தலுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ஸவின் கிடுங்குப் பிடியில் வழங்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் டியூ குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, ரெஜினோல்ட் குரே, ஸ்ரீ ரங்கா, பிரபா கணேசன் மற்றும் டிரான் அலஸ் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப் பட்டிருந்தன.இதற்கு வேட்டு வைக்கவே கட்சிகளின் செயலாளர்களை மாற்றியதோடு, அவர்களால் 24ஆம் திகதி வரை செயற்பட முடியாது எனத் தடையுத்தரவையும் வாங்கினார் ஜனாதிபதி.
மகிந்த தரப்பால் பழிவாங்கப்பட்டவர்களை புதிய செயலாளர்களின் ஊடாகப் பட்டியலில் இணைத்துக் கொண்டு மகிந்த தரப்பை முற்றாக துடைத்தெறிந்துள்ளார்.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இலங்கையின் பிரபல்யமான சட்டத்துறை பேராசிரியர்களில் முக்கியமானவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் துறைசார் முக்கிய பொறுப்புக்களை வகித்தவர். சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் தேசியப் பட்டியலூடாகக் கொண்டு வரப்பட்டவர். பின்னர் றணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பீடம் ஏறிய போது அவர் பக்கம் தாவி, பின் மகிந்த அதிகாரம் மிக்கவராக மாறியபோது பின் மீண்டும் ஒரு முறை கட்சி தாவினார். இவரை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய சந்திரிக்கா இவரை மண்டைக்குள் ஒன்றுமில்லாத பேராசிரியர் என ஒரு முறை கூறியிருந்தார். நல்ல அறிவைக் கொண்டிருந்த பேராசிரியரைக் கூட அரசியல் அதிகாரம் என்பதும், சுகபோகம் என்பதும் விட்டு வைக்கவில்லை. அதனால் இன்று அரசியல் அனாதை மட்டுமல்ல மண்டைக்குள் ஒன்றுமில்லாத பேராசிரியராகிப் போயிருக்கிறார்.
அடுத்து மிக முக்கியமானவர்கள் இருவர். டியூ குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண. இடதுசாரிக் கட்சிகளினூடு அரசியலுக்குள் புகுந்து வலது சந்தர்ப்பவாதிகளாக மாறி, ஆட்சியாளர்களுடன் இணைந்து அரசியல் வியாபாரம் செய்தவர்கள். பச்சோந்திகளாக தகிடுதத்தம் செய்த இவர்களின் அரசியல் எதிர்காலம் அஸ்த்தமனமாகிப் போனது.
திஸ்ஸ அத்தநாயக்காவைப் பற்றி சொல்லத் தேவையில்லை. எங்கோ ஒரு மூலையில் இருந்தவரை பஞ்சுமெத்தையில் தூக்கி வைத்தவர் றணில். அற்ப சொற்ப ஆசைகளுக்காக சோரம் போனது மட்டும் அல்ல நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கையெழுத்தை போலியாக இட்டு, நாட்டுமக்களைத் தவறாக வழிநடத்த முற்பட்டார்.அவரது அரசிலும் மரணித்துவிட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா, ஊடகவியலாளர் என்ற போர்வையில் மற்றவர்களுடைய வாழ்வை இல்லாது செய்யும் வேலைகளை தன் ஊடக பலத்தைக் கொண்டு செய்ய முற்பட்டார். கடந்த ஆட்சியில் இவரது ஊடக செயற்பாடுகளால் அவமானப் படுத்தப்பட்டவர்கள் ஏராளம். ஒரு ஊடக பலத்தினூடு எதனையும் செய்ய முடியும் ஊடகத்தினூடு மற்றவர்களை அவமானப்படுத்த முடியும் ஊடக பலத்தின் ஊடாகப் பேரம் பேசும் அரசியல் வியாபாரத்தை தொடரலாம் என நினைத்துக்கேவலமான ஊடக அரசியலை செய்த ரங்காவுக்கு மைத்திரி அளித்த தண்டனை குறைவானது என்று கூடச் சொல்லலாம்.
டிரான் அலசும் தனது ஊடக பலத்துடனும், பண பலத்துடனும் ஆளும் தரப்புகளூடு பேரம் பேசி தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டவர். மகிந்தவின் காலத்தில் தன்னால் எதனையும் செய்ய முடியும் என நினைத்த அவரும் இன்று நிர்கதியாக்கப்ட்டு உள்ளார்.
இனிவரும் காலங்களில் ஒரு ஊடகவியலாளரோ, ஊடகமோ தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை நிறைவு செய்வதற்கு ஊடக பலத்தை கருவியாக பயன்படுத்தினால் இறுதியில் அரசியலில் மட்டும் அல்ல ஊடகதுறையிலும் அனாதையாக வேண்டி வரும் என்பதனை இம்முறை தேசியபட்டியல் பாராளுமன்றத் தெரிவு உறுதிப்படுத்தி இருக்கிறது.
வடக்கில் தனது ஊடக பிரபல்யத்தைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு அரசியற் பேரம் பேசி முரண்பட்டு பின்னர், முன்னாள் போராளிகளை தனது அரசியல் நலனுக்கு பகடையாகப் பயன்படுத்தி தனித்து போட்டியிட்ட ஊடகவியலாளர் வித்தியாதரனுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்.
தெற்கின் ஊடக கலாசாரத்தைப் போன்று வடக்கில் ஒரு ஊடக நிறுவனம் தனது ஊடக பலத்தையும், யுத்தகாலங்களில் தாமே யாழ்ப்பாணத்தின் குரலாக இருந்தது என்ற கோசத்தையும் முன்னிறுத்தி கூட்டமைப்பிடம் அரசியல் பேரம் பேசும் நிலை இன்னும் தொடர்வதுடன் அதில் வெற்றியும் கண்டு வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல; ஆபத்தானது. ஊடகவியலாளர்களின் இத்தகைய நடத்தைகள் சனநாயக வெளிகளை குறுக்கிவிடும்.
“தனியார் ஊடகங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகாமைத்துவம், வெகுவாக அரசியல் மயப்படுத்தப்பட்டு உள்ளமை சர்வதேச நியமங்களான தேர்தல் காலத்தில் அனுசரிக்கப்பட வேண்டிய நடுநிலைத்தன்மை அல்லது சமநிலையை பாதிப்பதாக இருந்தது என ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை சொல்கிறது.
வடக்கு கிழக்கு உட்பட தமிழர் அரசியலில் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் தமது பிரபல்யங்களை அல்லது பலத்தை முன்னிறுத்தி அரசியல் அதிகாரத்தைப்பெறுவதற்கும் பேணுவதற்குமான பேரம் பேசலில் ஈடுபடும்போது அவற்றை துணிந்து புறந்தள்ள அரசியல் தலமைகைள் முயல வேண்டும். அல்லது மக்கள் அதற்கு தெளிவான பதிலை வழங்குவார்கள்.
இறுதியாக அங்கயன் ராமநாதன், ஹிஸ்புல்லா, (இவர் தன்னை மகிந்த விசுவாசியாக முன்னர் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தலும், அவருக்கு ஒரு குட்டுப் போட்டு மட்டக்களப்பு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதற்கு வேறு வழியில்லாமல் தேசியப் பட்டியலில் இடம் கொடுத்திருக்கிறார்.) பௌசி, பைசர் முஸ்தபா ஆகியோருடைய தெரிவின் மூலமாகவும் ஒரு செய்தியை மைத்திரி சொல்ல வருகிறார். சிறுபான்மையினப் பிரதிநிதித்துவம் இல்லாத சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக, தனது தலமைத்துவத்தின் கீழ் சிறிலங்கா சுதந்திரக் கட்சி விளங்கக் கூடாது என்பதனை அவர் தெளிவுபடுத்தி உள்ளார். தமிழ்ப்பிரதிநிதித்துவத்துக்கு அங்கயன் போன்ற ஒருவர் அமைந்துவிட்டார். என்பது வேறுகதை. அது மட்டும் அன்றி மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் கட்சிக்கு இல்லாது போன பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையையும், கொழும்பில் சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கான முஸ்லீம் பிரதிநிதித்துவம் இல்லாது போன நிலையையும் நிவர்த்திக்கிறார்.மறு முனையில் ஹிஸ்புல்லாவை தெரிவு செய்து பிள்ளையானை கழட்டி விட்டு இருக்கிறார்.
உண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தமிழ் முஸ்லீம் பிரதிநிதித்துவங்களை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஒப்பீட்டளவில் இவர்கள் கட்சிக்கு பொருத்தமானவர்கள் என மைத்திரி தெரிவு செய்திருக்கிறார்.
இதன் மூலம் பலருக்கு தான் சொல்ல வந்த செய்திகளை சொல்லி இருக்கிறார்.
இங்கு சிறுபான்மை இனக்கட்சிகள் கவனிக்கவேண்டிய முக்கியமான விடையம் என்னவென்றால் காலப்போக்கில் இப்போது தெரிவு செய்யப்பட்டவர்கள் போலல்லாது சமுகத்தின் ஆதரவு பெற்ற மனிதர்கள் பெரும்பான்மையுனக்கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கினால் என்னவாகும்என்பதுதான்?
ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு விட்டன. மீண்டும் ஒரு முறை மைத்திரி தனது பாணியில் பலருக்கு பதில் சொல்லி இருக்கிறார்.

இவ்விருவரையும் (றங்கா, டிரான் அலஸ்) தேசியப் பட்டியலில் இணைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன...

0 Comments