Subscribe Us

header ads

நம்பி வாக்களித்தோருக்கு நன்றி பாராட்டுகிறேன்-அன்வர் எம் முஸ்தபா


அம்பாறை மாவட்டத்தில் அரசியல் ரீதியிலான ஒரு மாற்றத்தை கொண்டுவந்து மக்களின் விட்டுப்போன உரிமைகளையும் உடமைகளையும் மீட்கும் நோக்கிலான எனது மாற்றத்தை  நோக்கிய மக்கள் பணியில் என்னுடன் இணைந்து கொண்டு எனக்கு வாக்களித்த கண்ணியமிக்க ஆதரவாளர்களுக்கும் கட்சிக்காக வாக்களித்த 33000 க்கு மேற்பட்டோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறித்த சில மாதங்களுக்கு முன்னர் அம்பாறை மண்ணுக்கு இந்த கட்சி விஸ்தரிப்பு பணியை செய்ய நான் முன்வந்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாள் முதல் என்னுடன் அர்பணிப்புடன் செயற்பட்ட எனது உயிரிலும் மேலான உறவுகளுக்கும் இரவு பகல் பாராது என்னுடன் அர்பணிப்புடன் செயற்பட்ட எனது சகல ஆதரவாளர்களுக்கும்,நடுநிலையாக செயற்பட்டு எமது செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டுசென்ற ஊடக நண்பர்கள் மற்றும் ஊடகங்களுக்கும்,எமக்கு ஆதரவளித்த முக புத்தக செயட்பாட்டாளர்களுக்கும் இந்த நிமிடம் நன்றி பாராட்ட கடமைபட்டுள்ளேன்.

 நமது மயில் சின்னதிட்கும் எனது இலக்கம் ஒன்றிற்கும்  எனக்காக வாக்களித்த எனது விசுவாசிகள் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை கூற கடமைப்பட்டவனாக உள்ளேன்.  இன்ஸா அல்லாஹ் எமது தலைமைத்துவத்தையும் எங்களையும் நம்பி வாக்களித்த  எங்களது அம்பாறை மாவட்ட  வாக்காளர்களை ஒரு போதும்எமது தலைமையோ அல்லது கட்சியோ  நடுத்தெருவில் விட்டு விடாது என்ற செய்தியைக் கூறிக் கொள்வதுடன்.இத்தேர்தலில் வெற்றியடைந்த சகலருக்கும் மக்கள் பணியை சரியாக நிறைவேற்ற என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்சா அல்லாஹ் விரைவில் எமது ஆதரவாளர்களை எமது கட்சி தலைமை சகிதம் சந்திக்க உள்ளோம் எனும் நட்செய்தியையும் இவ்வேளையில் தெரிவித்து கொள்கிறேன்.

அன்வர் எம் முஸ்தபா (M.Sc,MBCS,Dip.in.Diplomacy )
சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும்,
கிழக்கு மாகான இளைஜர் அமைப்பாளரும்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Post a Comment

0 Comments