நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லாவுக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
நேற்று மாலையளவில் இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லாவிற்கு தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதை கொண்டாடும் முகமாக அவருடைய ஆதரவாளர்கள் அவருடைய தொகுதியான காத்தான்குடியில் மேதலில் ஈடுபட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவிக்கின்றது.
இந்த மோதல் சம்பவத்தினால் 03 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒரு கர்ப்பிணத் தாய் பலமாக தாக்கப்பட்டுள்ளதாகவும் கபே அமைப்பின் நிறைவேற்றதிகாரி கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறும் கபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேர்தல் காலத்தில் காத்தான்குடியில் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக மேலதிக பொலிஸ் குழுவொன்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டடது.


0 Comments