மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஹிஸ்புல்லா தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து, அவரது ஆட்சி பிரதேசமான காத்தான்குடியில் நேற்று இரவு மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
மோதலில் மூவர் காயமடைந்துள்ளதோடு, கர்ப்பிணி தாய் ஒருவருக்கு குண்டர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், அது மனித நேயத்திற்கு ஒரு அவமானமான நிலைமையாகும் என கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முந்தைய காலத்தில் காத்தான்குடியில் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுபடுத்த மேலதிக பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தியமை தொடர்பில் இப்போது தேர்தலில் பதிவாகிய ஒரே சம்பவம் காத்தான்குடியில் மாத்திரமே.
இதுவரையிலான காலப்பகுதியினுள் 13 தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் பதிவாகியுள்ளது.
இத்தாக்குதலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிப்பதாகவும், கூடிய விரைவில் தாக்குதலுக்கு தொடர்பான நபரை கைது செய்யுமாறு கபே அமைப்பு கேட்டுகொண்டுள்ளது.

0 Comments