Subscribe Us

இனப் பிரச்சனைத் தீர்வுக்கு தேசிய அரசாங்கம் முன்னுரிமை வழங்கவேண்டும்


புதிய தேசிய அரசாங்கம், தேசிய இனப்பிரச்சனையை தீர்க்கும் விடயத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் எனவும், அது தொடர்பில் தொடர்ந்தும் தமது தரப்பில் அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:

அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோன்று தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்குள் இருந்து அழுத்தம் கொடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments