சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் இருப்பதன் காரணமாகவே விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடக சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
லசந்தவை கொலை செய்தவர் குறித்து ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்படியானால் விசாரணைகளை நடத்தலாமே?.ஏன் விசாரணை நடத்துவதில்லை? சந்தேகிக்கப்படுவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இருப்பதன் காரணமாகவா விசாரணை நடத்தப்படுவதில்லை.?. இதன் காரணமாகவே எனக்கு உண்மையான சந்தேகம் ஏற்படுகிறது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கையில் காட்டுச் சட்டம் அமுலில் இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமத்தும் குற்றச்சாட்டை மகிந்த நிராகரித்துள்ளார்.
இது பச்சை பொய், இது அவர்களால் புனையப்பட்ட சேறுபூசும் விமர்சனம்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனவரி மாதம் தோல்வியடைந்த பின்னர், இலங்கை தொடர்ந்தும் இருள் சூழ்ந்த யுகத்தை நோக்கி பயணித்து வருகிறதே தவிர நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


0 Comments