Subscribe Us

மஹிந்த மீண்டும் வந்தால் சீரழிவுதான் - எச்சரிக்கிறார் சந்திரிகா


மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சீரழித்து விடுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அகலவத்தையில் நடைபெற்ற கூட்ட மொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், மஹிந்த ராஜபக்ஷ நாட்டை சீரழித்ததன் பின்னர், ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம் நாட்டை மாற்றியமைக்க முடிந்ததாகவும் கட்சியில் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலுக்கு வந்துள்ளார் எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிட்டார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷவின் இத்தகைய முயற்சியை தோல்வியடையச் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments